Google
IndiaSrilankaTravelWorld
Trending

இயற்கையை ஆரத்தழுவிக்கொண்டு செல்லும் ஓர் அதிசயமிக்க பசுமையான ரயில் பயணம்

GoogleAd

கண்டியிலிருந்து எல்லை வரை பயணிக்கும் ரயில் பயணமானது உலகின் மிக அழகான ரயில் பயணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகளை மாத்திரம் கவர்ந்த இந்த ரயில் பயணம் தற்போது அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றது.

இந்த பயணத்திற்கு நீங்கள் தயாராகிவிட்டால் கண்டிப்பாக ஒரு நாள் முன்னதாகவே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளுதல் நல்லது

சுமார் 7மணித்தியாலங்கள் கொண்ட இந்தப்பயணம் 158KM நீளத்தை கொண்டுள்ளது.

மலை நாட்டின் ரம்மியமான எப்போதும் பனி மூட்டங்களால் குளிர்ந்த காலநிலையோடு அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள கரடுமுறடான பாதையில் கம்பீரமாக பயணிக்கும் இந்த ரயில் பயணத்தில்

ஆச்சரியத்தை மட்டுமல்லாது பயத்தையும் உண்டாக்கும் மலைகளை குடைந்து உருவாக்கப்பட்டிருக்கும் குகைப்பாதைகள்,
மலைகளின் மேல் படர்ந்துகிடக்கும் மேகக்கூட்டங்கள் , அழகான பழைய ரயில் பாலங்கள், நீர்வீழ்ச்சிகள் , சிறிய சிறிய மலைக்கிராமங்கள், பச்சைப்பசேலன விரிந்து கிடக்கும் அழகான தேயிலைத்தோட்டம் உட்பட இன்னும் பல இயற்கை தரும் மாயா ஜால காட்சிகளை கண்டு கொண்டே பயணிப்பதால்

இயற்கையை கட்டித்தழுவிக்கொண்டே பயணிப்பதாக ஒரு உணர்வு உருவாவதை தவிர்க்க முடியாது ( நீங்கள் இயற்கையை விரும்பி பயணம் செய்யும் ஒருவராக இருந்தால் மாத்திரம்)

இலங்கை நாட்டின் பிறந்த நம் ஒவ்வொருவரும் உங்கள் வாழ் நாளில் கட்டாயம் குடும்பத்துடன் ஒரு முறையாவது சென்று ரசிக்க வேண்டிய ஒரு பசுமையான ரயில் பயணம் இது என்பதை Tamil Traveler குழுமம் பரிந்துரைக்கின்றது.

Ad
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close