Google
SrilankaTravelWorld
Trending

#Ella_Rock நம் வாழ்நாளில் ஒருமுறையாவது கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஒரு இயற்கையின் பிரம்மிப்பு

GoogleAd

Ella Rock என்பது எல்ல கிராமத்திற்கு மேலே கடல் மட்டத்திலிருந்து 1041 மீ (3415 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைக்குன்றின் அதிர்ச்சியூட்டும் கண்ணோட்டம் (View Point) ஆகும்.

நாட்டில் உள்ள மலைகள் முழுவதும் இங்கே மிகவும் மூச்சடைக்கக்கூடிய தோற்றத்துடன் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றது

இங்கே செல்வதற்கு நீங்கள் தீர்மானித்தால் கட்டாயம் நீங்கள் அதிகாலை யிலையே புறப்படுமாறு Tamil Travel Diary குழுமம் பரிந்துரைக்கின்றது

ஏனென்றால் மற்றைய பகுதிகளை விட இந்த பகுதி அதிக குளிரான பகுதியாகும் தாமதமாக நீங்கள் புறப்பட்டால் மலைக்குன்றில் படர்ந்திக்கும் மேகங்கள் மெல்ல மெல்ல உயரத்திற்கு சென்றுவிடும் இதனால் மலை உச்சியிலுள்ள ரம்மியான காட்சிகளை நீங்கள் காண்பது மிகவும் கடினமாகும்.

இலங்கையின் மிகவும் பிரபலமான 9வளைவுகள் கொண்ட ஒரு புகையிரதப்பாலமும் இங்குதான் உள்ளது 
இந்தப் பயணத்தில் இதைப்பார்ப்பதற்க்கு மறக்க வேண்டாம். இதனூடாக ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் மாத்திரமே ரயில் செல்லும் காத்திருந்து அந்த காட்சியை நீங்கள் அனுபவித்தீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலிதான்

இந்த மலையேற்றம் நகரத்தின் மையத்திலிருந்து சுமார் 8கி.மீ நீளம் கொண்டது இதன் உச்சியை அடைவதற்க்கு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும் ஆனால் இந்தப்பகுதி அதிகம் செங்குத்தான பாதைகள் இல்லை ஆனாலும் இந்த ஏற்றம் கொஞ்சம் கடினம்தான்.

மேலே செல்லும் வழியில் அழகான பச்சைப்பசேலன வீற்றிருக்கும் தேயிலைத்தோட்டங்கள், அழகான ரயில் தடங்கள் , மற்றும் ரம்மியமான இலங்கையின் மலைப்புற கிராமங்கள் உட்பட மேலும் பல காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.

நீங்கள் தனியாக சென்று வழியில் பாதை தவறி சிக்கிக்கொண்டால் , அதே பாதையில் எப்போதும் மற்ற சுற்றுலாப் பயணிகள் இருப்பார்கள் மற்றும் பல உள்ளூர்வாசிகள் உங்களுக்கு உதவுவார்கள்
இங்கே தனியாக செல்வதற்கு நீங்கள் தயங்கினால் உங்களுக்கு வழிகாட்ட உள்ளூர் வழிகாட்டிகள் உள்ளனர் இதற்காக அவர்கள் 1500 ரூபாய் களை அறவிடுவர்

உங்கள் வாழ் நாளில் கட்டாயம் நீங்கள் சென்று ரசிக்க வேண்டிய ஒரு Adventure Travel இது என்பதை Tamiltraveler.online பரிந்துரைக்கின்றது.

(பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் எந்த வித இலாப நோக்கங்களுமின்றி நாம் தொகுத்து வழங்கும் இப்பதிவுகளை தயவு செய்து #Copy_Paste செய்து பதிவிடமால் #Share பட்டனை அழுத்தி எமக்கு ஆதரவளியுங்கள்.)

Ad
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close