Google
IndiaSrilankaTravelWorld
Trending

ரங்கல கிராமத்திற்கு இயற்கை வழங்கியிருக்கும் சுத்தமான நீரைக்கொண்ட ஒரு குளியல் தடாகம்.

GoogleAd

ஆடம்பர Resortகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயற்கையாக அமையப்பெற்றிருக்கும் Swimming Pool களில் ஆயிரக்கணக்கில் நமது பணங்களை செலவழித்து கிடைக்காத மகிழ்ச்சி மற்றும் சந்தோசங்களை இயற்கையானது நமக்கு இலவசமாகவே சிலவேளைகளில் தந்துவிடுகின்றது.

அந்த வகையில் தற்போது இயற்கையை விரும்பி பயணிக்கும் உல்லாச பயணிகளிடையே மிகவும் பிரபலமாகி வரும் முற்றுமுழுதாக இயற்கை காடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த இயற்கை குளியல் தடாகம் நக்கிள்ஸ் மலைத்தொடரின் வனப்பபகுதிற்கு செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ளது.

கண்டியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் தெல்டேனியாவை அடைந்து, பின்னர் இடதுபுறம் திரும்பி ரங்கல கிராமத்திற்கு செல்லும் பாலத்தின் இடதுபுறத்தில் பாதையோரத்திலையே இது அமையப்பெற்றுள்ளது .

சுமார் 30மீற்றர் வரை ஆளமுள்ள இந்தக்குளம் நீராடுவதற்கு உரிய சுத்தமான தெளிவான நீரைக்கொண்டுள்ளது. ஆனால் எந்த வித அவதான பலகைகளோ அல்லது வழிகாட்டிகளோ இல்லாத ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாகும் ஆகையால் நீராடும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு Tamil Travel Diary குழுமம் அறிவுருத்துகின்றது.

உங்கள் வாழ் நாளில் கட்டாயம் நீங்கள் சென்று ரசிக்க வேண்டிய ஒரு இயற்கையின் கொடை இது என்பதை Tamiltraveler.online குழுமம் பரிந்துரைக்கின்றது.

காணொளி வடிவில் காண கீழே உள்ள எமது யூடியூப் பக்கத்தை Subscribe செய்யுங்கள்
https://www.youtube.com/channel/UCBostmdpn83RSj6mEeHiQNg

இது போன்ற மேலும் பல Hide Travel Places தொடர்பான தகவல்களை பெற எமது Tamiltraveler.online எனும் பக்கத்தை visit செய்யுங்கள்

உங்கள் நண்பர்களுக்கும் எமது பக்கத்தை Share செய்து அறிமுகப்படுத்தி மேலும் எங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்

Ad
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close