Google
Life StyleUncategorised
Trending

இலங்கை மலை நாட்டின் 9வளைவுகள் கொண்ட புகையிரதப்பாலம்

GoogleAd

ஆங்கிலேயரின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் 9 Arch railway bridge.

மலை நாட்டில் தெமோதர எனும் நகரில் அமைந்திருக்கிறது. எல்லே ரயில் நிலையத்திற்கும் தெமோதர ரயில் நிலையத்துக்கும் இடையில் அமைந்துள்ளது.

எல்லே நகரத்தில் இருந்து 3.7 Km தூரம் தமது வாகனத்தில் செல்ல முடியும். பின்னர் 1.5 Km நடந்து செல்ல வேண்டும். இந்த தூரத்தை கடப்பதற்கு ஆட்டோவில் செல்ல முடியும். 300 ரூபா ஆட்டோ கட்டணம் அறவிடப்படும். பின்னர் எந்த வாகனமும் செல்ல முடியாத நடை வழி மூலமாக மீண்டும் 1 Km செல்ல வேண்டும். இந்த பாதை மிகவும் கடினத்தன்மை வாய்ந்தது. கிரவல் பாங்கான பள்ளம் படு குழி கொண்டதாக காணப்படுகிறது.

1921 ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மலை குன்றுகளைக் இணைத்து சுமார் 80 அடி பள்ளத்தை நிரப்பு வதற்காக 9 வளைவுகள் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலே ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது.

இதனை பார்க்கும் போது ஒரு நூற்றாண்டுக்கு முதல் ஆங்கிலேயரின் அறிவும், மலையக தொழிலாளர்களின் கடின உழைப்பும், யாரும் விபரிக்காமல் கண் முன் வந்து சென்றது. அத்துடன் ஒரு நூற்றாண்டு கழித்தும், இப்போது உள்ள தொழிநுட்பத்தை பயன்படுத்தியும் இப்படி ஒரு கட்டக்கலையை நம்மால் இன்றாவது கட்ட முடியுமா என்பது கேள்விக்குறியே???
நாம் ஆங்கிலேயரின் தொழில்நுட்பத்திற்கு 100 வருடங்கள் பின்னிற்கின்றோம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

இதன் நீளம் 300 அடி (91.44m), அகளம் 25 அடி (7.62m), உயரம் 90 அடி (24.38m).

Coordinate

https://goo.gl/maps/zxxTjgK2dEF2

இந்த இடத்துக்கு இன்று (2018 September 23) குடும்ப சகிதம் சென்றோம். ஒரு மறக்க முடியாத Adventure பயணமாக அமைந்திருந்தது.

அதிகளவு சுற்றுலா பிரயாணிகளை கவரந்த ஓர் இடமாக உள்ளது. வெளிநாட்டவர்களும் சிங்கள சகோதரர்களும் அதிகமாக காணப்பட்டார்கள். தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் குறைவாக காணப்பட்டார்கள்.

செல்லும் பாதை ஓரளவு கடினமாக இருப்பதால் குடும்ப சகிதம் செல்வது சிரமத்தை ஏற்படுத்தும். என்றாலும் அதன் அழகை பார்த்த பின்னர்,இங்கே எவ்வளவு கஸ்டப்பட்டு வந்து பார்த்தாலும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்தான் இது என்று சொன்னால் என் மனைவி ———— . அவளின் மன வலிமையையும் உடல்
வலிமையையும் பார்த்து வியந்ததும் இந்த பயணம் தந்த புது அனுபவமே.

I highly recommend this place for loving adventure people same like us.
Cheers 🥂.

Ad
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close